“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

By Visaka on ஆடி 3, 2026

Spread the love

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய மாஸ்டர் பிளானை வகுத்துள்ளார். இதன் தொடக்கமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், வரும் ஜூலை 06-ஆம் தேதி தொடங்கி ஜூலை 09-ஆம் தேதி வரை இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டங்கள் தினசரி மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்படவுள்ளன. தஞ்சாவூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர். இக்கூட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் செயலாளர்கள், கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் என அனைத்து மட்டத்திலான பிரதிநிதிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்தகட்டமாக அதிமுகவை அடிமட்ட அளவில் கொண்டு சேர்க்க வேண்டிய ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இக்கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக, மூத்த அதிமுக நிர்வாகிகள் சிலர் அண்மைகாலமாகத் தமிழக வெற்றிக் கழகம் போன்ற மாற்றுப் கட்சிகளில் இணைந்து வரும் சூழலில், கட்சியின் உட்கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் இந்த மாவட்ட வாரியான நேரடி சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.