திமுகவில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த பரந்தாமன், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருப்பது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னையில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக, முடிசூடா மன்னராகச் சேகர்பாபு வலம் வந்ததாகவும்.
ஆனால் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் பின்னடைவைச் சந்தித்ததற்கு அல்லது தோற்பதற்குக் காரணமே அவர்தான் என்றும் கட்சிக்குள்ளேயே பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இத்தகையதொரு இக்கட்டான அரசியல் சூழலில், தலைமைப் பீடமான அறிவாலயத்திலேயே பரந்தாமன் பிரஸ்மீட் கொடுத்திருப்பது சாதாரணமாகப் பார்க்கப்படவில்லை; மாறாக, கட்சியில் சேகர்பாபுவின் ஆதிக்கம் குறைந்து, பரந்தாமனின் கை ஓங்குவதையும், இது திமுகவிற்குள் சென்னை அரசியலில் ஏற்பட்டு வரும் ஒரு முக்கிய அதிகார மாற்றத்தின் தொடக்கம் என்றும் உடன்பிறப்புகள் கருதுகின்றனர்.
