முடியலடா சாமி..! வெப்பத்தின் கொடுமை… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

By Swetha on ஆடி 2, 2026

Spread the love

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி பிரபல பர்னிச்சர் நிறுவனமான ‘ஐகியா’ (IKEA) ஸ்டோருக்குள் தஞ்சமடைந்து வரும் விசித்திரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐரோப்பாவில் தற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், இந்த அசாதாரண சூழலைச் சமாளிக்க மக்கள் இந்த புதிய உத்தியைக் கையாண்டு வருகின்றனர்.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், நூற்றுக்கணக்கான பாரிஸ் நகர மக்கள் ஐகியா ஸ்டோரில் இருக்கும் ஏசி காற்றை அனுபவிப்பதற்காகக் குவிந்துள்ளனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சோபாக்கள், மெத்தைகள் மற்றும் சொகுசு நாற்காலிகளில் மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி சாதாரணமாகப் படுத்து உறங்குகின்றனர். சிலர் தங்களின் மொபைல் போன்களைப் பயன்படுத்திக் கொண்டும், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டும் அங்கேயே பொழுதைக் கழிக்கின்றனர். இந்த ஸ்டோர் தற்போது பர்னிச்சர் கடையைப் போல இல்லாமல், மக்கள் ஓய்வெடுக்கும் பொது விடுதி போல காட்சியளிக்கிறது.

   

பாரிஸ் மட்டுமன்றி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வெயிலின் தாக்கம் 30 முதல் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது. வட ஆப்பிரிக்காவிலிருந்து வீசும் வெப்பக் காற்றே இதற்குக் காரணம் என்றும், பருவநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் இந்தத் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பிரான்சில் இந்த அக்னி வெயிலின் கொடுமையால் வெறும் நான்கு நாட்களில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.