“நான் செத்துட்டேன்.. தனக்குத்தானே RIP ஸ்டேட்டஸ் வைத்த கணவன்”… வீட்டிற்குள் ஓடிச்சென்று மனைவி செய்த காரியம்…. ஊரையே நடுங்க வைத்த சம்பவம்..!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (31). நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வரும் இவருக்கு, காயத்ரி (24) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனமுடைந்த பிரவீன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். விரக்தியின் விளிம்பிற்குச் சென்ற அவர், எலிமருந்தை வாங்கிச் சாப்பிட்டதோடு நில்லாமல், சமூக வலைத்தளமான ‘ஹெலோ’ செயலி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரித்து ‘RIP’ என்று பதிவிட்டுள்ளார்.

கணவனின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பார்த்த மனைவி காயத்ரி, அதிர்ச்சியிலும் வேதனையிலும் உறைந்துபோனார். தனது கணவர் நிஜமாகவே இறந்துவிட்டார் என்று தவறாகப் புரிந்துகொண்ட அவர், பதற்றத்தில் செய்வதறியாது திகைத்துள்ளார். கணவனை இழந்த துயரத்தைத் தாங்க முடியாமல், மனமுடைந்த காயத்ரி உடனடியாக வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு அவசரமான பதிவும், அதனால் ஏற்பட்ட தவறான புரிதலும் ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பறித்த சோகம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.

   

மறுபுறம், எலிமருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் மைலி அம்மன் கோவில் அருகே கிடந்த பிரவீனை, அங்கிருந்த பொது மக்கள் மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஆலிவலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவன் விளையாட்டாகவோ அல்லது விரக்தியிலோ போட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், மனைவியின் உயிரைப் பறித்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.