“திமுகவின் ரூ.50 கோடி ஆஃபர்”…. தவெக MLA-க்களை விலைக்கு வாங்க ப்ளான்?… ஆதவ் அர்ஜுனா அம்பலப்படுத்திய உண்மை… பரபரப்பு…!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

ஆதவ் அர்ஜுனாவின் இந்த அதிரடி அரசியல் குற்றச்சாட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர்களை தலா ரூ.50 கோடி ஆஃபர் கொடுத்து, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து விலைக்கு வாங்க திமுக முயற்சிப்பதாக மாமல்லபுரம் நிகழ்ச்சியில் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், வரவிருக்கும் தேர்தல்களில் 234 தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்கும் என்று காரசாரமாகத் தெரிவித்த அவர், கரூர் விவகாரத்தில் தங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட கணக்கு உள்ளதாகவும், தங்கள் மக்களைக் கொன்று குவித்த அந்த கணக்கை தீர்க்காமல் விடப்போவதில்லை என்றும் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். திமுகவிற்கு எதிராக அவர் முன்வைத்துள்ள இந்த கடுமையான சவால், தற்போதைய அரசியல் சூழலில் விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.