திமுக தேர்தல் தோல்வி குறித்த கள ஆய்வுக்குழுவின் அறிக்கையில் 34 மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இந்த அதிருப்தியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவே திமுக தலைமை தற்போது மறுசீரமைப்பு குழுவை அமைத்துள்ளதாகக் கூறப்படும் வேளையில், ஒருவேளை இந்த நிர்வாகிகள் அனைவரும் தவெகவில் இணைந்தால், அது அரசியல் களம் காணும் ‘CM’ விஜய்க்கு ஒரே நேரத்தில் இரட்டிப்பு பலத்தைத் தரும் ஒரு “டபுள் ட்ரீட்” ஆக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
