FLASH NEWS: தவெகவில் இணைகிறோம்… காரணத்தைக் கூறி அதிமுகவை அதிர வைத்த விஜயபாஸ்கர்… உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!

By Visaka on ஆடி 2, 2026

Spread the love

அதிமுக தலைமையின் தவறான முடிவுகளின் காரணமாகவே தான் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களும் தற்போது முற்றிலும் காலியாகிவிட்டதாகவும், தவெகவில் இணைவதற்காக அதிகாலை 6 மணி முதலே மாமல்லபுரத்தில் தொண்டர்கள் பெருந்திரளாகக் குவிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சி.விஜயபாஸ்கர் உட்பட அதிமுகவைச் சேர்ந்த 4 முன்னாள் அமைச்சர்கள் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையவுள்ள இந்த அதிரடி நகர்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.