அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில், ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை சந்தித்துள்ளது.
இந்த பிரம்மாண்ட இணைப்பில் 2 முன்னாள் அமைச்சர்கள், 4 மாவட்ட செயலாளர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட 4 வேட்பாளர்கள், 50 மாநில நிர்வாகிகள், 60 ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் மற்றும் 40 மாவட்ட அணி செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தவெகவில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். இவர்களது அதிகாரப்பூர்வ இணைப்பு விழாவானது இன்று காலை 9 மணி அளவில், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
