“வேலுமணியைத் தொடர்ந்து அடுத்த விக்கெட் அவுட்?”… அதிமுகவை காலி செய்யும் ‘தவெக’.. அலறும் எடப்பாடி படை….!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் முன்னாள் அமைச்சர்களான இரு விஜயபாஸ்கர்களும் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, தற்போது கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக தஞ்சை மாவட்டச் செயலாளரான மா.சேகரும் தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே எஸ்பி வேலுமணி தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் சூழலில், அடுத்தடுத்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்குத் தாவத் தயாராகி வருவது அதிமுகவின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு பலத்த சவாலாக உருவெடுத்துள்ளது.