“5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்”…. 200 பேருந்துகள், 7 மணி நேரப் பயணம்… அதிமுக காலி?… ஒரே நாளில் தவெக-வில் இணையும் 100 முக்கிய தலைவர்கள்… செம குஷியில் விஜய்…!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு நின்றுவிடாமல், தனக்கு ஆதரவளித்த மாற்றுக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்து ஒரு புதிய அரசியல் நாகரிகத்தைத் தொடங்கி வைத்துள்ளார் அக்கட்சியின் தலைவர். தமிழக வரலாற்றிலேயே இல்லாத இந்த எதிர்பாராத திருப்பமும் அதிகாரப் பகிர்வும், ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் தவெகவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

தவெகவில் இணைந்தால் அல்லது கூட்டணி வைத்தால் தங்களுக்கு அமைச்சர் பதவி நிச்சயம் கிடைக்கும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை தற்போது பல அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் மற்றும் அதிமுக போன்ற முக்கியக் கட்சிகள் தவெகவுடன் கைகோர்க்க அசாத்திய ஆர்வம் காட்டி வருகின்றன. ஒருபுறம் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் வேளையில், மறுபுறம் அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதில் 4 பேர் தவெகவில் இணைந்துவிட்ட நிலையில், விரைவில் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் தவெகவில் இணையப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

   

இந்த அரசியல் நகர்வுகளின் உச்சகட்டமாக, நாளை அதிமுகவைச் சேர்ந்த 5 முன்னாள் அமைச்சர்கள், 15 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த சி.விஜயபாஸ்கர், “சுமார் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 7 மணி நேரம் பயணித்துத் தொண்டர்கள் தவெகவில் இணைய வருகிறார்கள் என்றால், தற்போதைய எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மீது அவர்கள் எவ்வளவு அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அடுத்தடுத்த திருப்பங்கள் தமிழக அரசியலில் தவெகவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.