“இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா?”… டெல்லி மருந்தகத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்… மிரண்டு போன வெளிநாட்டுப் பெண்… வைரலாகும் வீடியோ…!

By Visaka on ஆடி 1, 2026

Spread the love

டெல்லியில் மருந்துக்கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பலரது இதயங்களை வென்று வருகிறது. இந்தியாவில் நீண்ட நாட்களாக வசித்து வரும் டொமினிகா படாலாஸ்-கல்ரா என்ற அந்தப் பெண், நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு மருந்தகத்தில் சில மருந்துகளை வாங்கினார். ஆனால், அவசரத்திலோ அல்லது மறதியிலோ அந்த மருந்துப் பையை அங்கேயே விட்டுவிட்டு டெல்லியை விட்டும் வெளியே சென்றுவிட்டார். நான்கு நாட்கள் கழித்து மீண்டும் அந்த கடைக்குச் சென்றபோது, இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் தன் மருந்துகள் பத்திரமாக இருக்குமா என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்துள்ளது.

https://www.instagram.com/reel/DZ4-yRqAiyD/?utm_source=ig_embed&ig_rid=AzVke1m9L18EPenSpSIlbtx

   

மருந்தகத்தை அடைந்த டொமினிகா, கடைக்காரரிடம் தனது மருந்துப் பையைப் பற்றி விசாரித்தபோது, அந்த கடைக்காரர் உடனடியாக அந்தப் பையை நினைவு கூர்ந்து, அதனை அப்படியே பத்திரமாக எடுத்து அவரிடம் நீட்டியுள்ளார். இதனால் ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைந்த டொமினிகா, தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுபோன்ற நல்ல விஷயங்கள் இன்னும் நடந்து கொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; இதற்காகவே எனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த லட்சக்கணக்கான நெட்டிசன்கள், இந்தியாவின் இந்த எதார்த்தமான நேர்மையைக் கொண்டாடி வருகின்றனர்.

   

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல இந்திய இணையவாசிகள் தங்களுக்கு நடந்த இது போன்ற சுவாரசியமான, நேர்மையான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். காய்கறி வியாபாரிகள் முதல் மொபைல் போனைத் தவறவிட்ட மருந்தகங்கள் வரை, இந்தியாவில் உள்ள எளிய மனிதர்கள் பிறர் பொருட்களைப் பத்திரமாகத் திருப்பித் தருவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றுதான் என்று அவர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர். “இது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்” என்றும், நாட்டின் மீதான நேர்மறையான பார்வையைப் பகிர்ந்து வரும் டொமினிகாவிற்குத் தங்களது வாழ்த்துகளையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.