“யாரா இருந்தாலும் விடாதீங்க”… இனி தமிழ்நாட்டில் இது நடக்கவே கூடாது… IAS, IPS அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக காவல்துறையினர் எவ்வித தாமதமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்கள் அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். சென்னையில் இரண்டு நாட்களாக அவரது தலைமையில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உயர் அதிகாரிகளின் மாநாடு நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

இந்த மாநாட்டில், அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்களை முழுமையாகச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதில் எவ்வித சமரசமும் இன்றி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அவர்கள் மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.