12 தொகுதிகளில் இடைத்தேர்தல்…. CM விஜய் போட்ட ரகசிய ஸ்கெட்ச்?… தமிழ்நாடு அரசியலை அதிரவைத்த ஆர்.பி.உதயகுமாரின் அறிக்கை…!

By Nanthini on ஆனி 30, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், தங்களுக்குத் தேவையான முழு பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், ஆட்சியைத் தக்கவைக்கவும் பலப்படுத்தவும் அடுத்தடுத்து மாற்றுக்கட்சி ஆட்களைத் தன்வசப்படுத்தும் “ஆள் பிடிக்கும்” வேலையில் முதல்வர் விஜய் சளைக்காமல் சாதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கோவில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிள்ளை பிடிக்கிறவர்களுக்கும், ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வென்ற எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுப்பவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?” என மிகக் கடுமையான கேள்வியைக் கணையாகத் தொடுத்துள்ள அவர், தவெக அரசின் இத்தகைய அரசியல் நகர்வுகள் ஜனநாயக மாண்புகளைச் சிதைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.