கரூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று அதிரடியாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற அரசியல் பரபரப்பு நிலவி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ராஜினாமாவின் மூலம் தமிழகத்தில் தற்போது கரூர், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசியல் களம் அடுத்தகட்ட நகர்வை நோக்கி விறுவிறுப்படைந்துள்ளது.
