“1999-லேயே ஏஐ-யா…?! தமிழ் சீரியலில் ஒளிந்திருந்த பேரதிர்ச்சி ரகசியம்… 26 வருடங்களுக்கு முன்பே உலகை உலுக்கிய அந்த ஒரு காட்சி…!!”

By Swetha on ஆனி 30, 2026

Spread the love

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த 30 வருடங்களில் நிகழ்ந்த தொழில்நுட்பப் புரட்சியால், பணப் பரிவர்த்தனை முதல் அன்றாட தேவைகள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகி மொபைல் போனுக்குள் சுருங்கிவிட்டன. இந்த ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்குப் பல வழிகளில் உதவினாலும், மறுபுறம் பத்து பேர் செய்ய வேண்டிய வேலையைத் தானே செய்து பலரது வேலைவாய்ப்புகளைப் பறித்து வருகிறது. மேலும், பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக மாற்றுவது போன்ற அத்துமீறிய மற்றும் தவறான செயல்களுக்கும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஏஐ தொழில்நுட்பம் குறித்து, கடந்த 1999ஆம் ஆண்டிலேயே புகழ்பெற்ற தமிழ் சீரியலான ‘மர்ம தேசம்’ தொடரில் பேசப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் நாகா இயக்கிய இந்த சீரியலின் ஒரு காட்சியில், நடிகர் ராம்ஜி கேட்கும் கேள்விக்கு, நடிகர் பப்லு பிருத்விராஜ் பதிலளிப்பார். அதில் அவர், “எனக்கு சொந்த ஊர் மெட்ராஸ்தான்; அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஏஐ -யில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிடுவார்.

   

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த பழைய வீடியோ காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் 90ஸ் கிட்ஸ் ஆச்சரியமடைந்துள்ளனர். 26 வருடங்களுக்கு முன்பே, எதிர்காலத்தில் வரப்போகும் ஏஐ தொழில்நுட்பம் குறித்துத் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்த இயக்குனர் நாகாவை ஒரு “தீர்க்கதரிசி” என்று நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள். சன் டிவி மற்றும் ராஜ் டிவியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மர்ம தேசம்’ சீரியல், இன்றும் மக்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்பதற்கு இந்த வைரல் வீடியோவே சான்றாகும்.