தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் நலத்திட்டங்களை தடையின்றி கொண்டு சேர்க்கவும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து, “போதையில்லா தமிழகத்தை” உருவாக்குவதற்கு தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.
மேலும், சமுகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறையினர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் அடித்தட்டு மக்களையும் முழுமையாகச் சென்றடைவதை ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
