தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளில் முதலமைச்சர் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க-வின் பின்னடைவுக்கு, தகுதியுள்ள அனைவருக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்காததும் ஒரு முக்கிய காரணம் என ஆய்வுக் குழு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்ததை உணர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய விண்ணப்பங்களைப் பெற்று, விடுபட்ட தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முதல்வர் திட்டமிட்டுள்ளார். இந்த அதிரடி நகர்வு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பலத்தைத் தரும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
