சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவில் கட்சிக்குத் துரோகம் செய்தவர்களைக் களையெடுக்க மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளனர். துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியவுடன், முக்கியப் புள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததற்குக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் மறைமுகக் காட்டிக்கொடுப்பே காரணம் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தவெகவின் எழுச்சியைக் கண்டு, ஆளும் தரப்பிற்குச் சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துரோகம் செய்ததாகக் கருதப்படும் சுமார் 22 பேர் கொண்ட பட்டியல் உதயநிதி ஸ்டாலின் மேற்பார்வையில் தயாராக உள்ளது. முறைகேடுகள் மற்றும் கூட்டணியில் சரியாகச் செயல்படாதது போன்ற காரணங்களுக்காக, வெளிநாட்டுப் பயணத்திற்குப் பின் இவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதால் மூத்த தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
