“அந்த வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவோம்” காதலனுடன் தனிமையில் இருந்ததை தோழியிடம் சொன்ன கல்லூரி மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

By Swetha on ஆனி 27, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்துரு ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அவர்கள் செஞ்சியில் உள்ள சிவன் கோயிலில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது சந்துருவுடன் அந்த மாணவிக்குக் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், இருவரும் தனியாகச் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இந்தத் தனிப்பட்ட விபரங்கள் அனைத்தையும் அந்த மாணவி தனது நெருங்கிய தோழியான அருந்ததி என்பவரிடம் நம்பிக்கையுடன் பகிர்ந்துள்ளார்.

இருப்பினும், தோழி அருந்ததி அந்த நம்பிக்கையைத் துரோகமாக மாற்றியுள்ளார். மாணவியிடம் பேசிய அருந்ததி, “நீயும் சந்துருவும் தனிமையில் நெருக்கமாக இருந்ததை அவர்கள் வீடியோ எடுத்து வைத்துள்ளனர்; அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகாமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்குப் பணம் தர வேண்டும்” என்று கூறி மிரட்டியுள்ளார். தோழியே மாஃபியா போல் மாறி, ஆதி மற்றும் சந்துருவுடன் சேர்ந்து கொண்டு தன்னிடம் மிரட்டல் பணம் (Extortion) கேட்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.