மாத வாடகை ₹0… ஆனா டெபாசிட் ₹40 லட்சமா?… பெங்களூருவில் வாடகை வீடு தேடிய இளைஞர்… ₹40 லட்சம் டெபாசிட்டுக்கு ஐஐடி இளைஞர் கொடுத்த மாஸ் ஆஃபர்…!

By Visaka on ஆனி 27, 2026

Spread the love

பெங்களூரில் வாடகைக்கு வீடு தேடுவது எப்போதுமே ஒரு சவாலான விஷயம் தான். ஆனால், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு சம்பவம் நெட்டிசன்களை ஒரே நேரத்தில் வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ்தளத்தில் பயோம (@HelloVyom) என்பவர் பகிர்ந்துள்ள பதிவின்படி, பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிலப்பிரபு, தனக்கு மாத வாடகை தேவையில்லை என்றும், தான் ஏற்கனவே பெரும் பணக்காரர் என்றும் கூறியுள்ளார். ஆனால், அதற்குப் பதிலாக அவர் 40 லட்சம் ரூபாய் முன்பணமாக கேட்டுள்ளார். அந்த இளைஞர் ஐஐடி-யில் படித்தவர் என்பதை அறிந்து நிலப்பிரபு ஈர்க்கப்பட்டாலும், இந்த இமாலய டெபாசிட் தொகை அந்த இளைஞரை யோசிக்க வைத்தது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த இளைஞர் ஒரு சுவாரசியமான சலுகையை முன்வைத்தார். ரொக்கமாக 40 லட்சம் ரூபாய் தருவதற்குப் பதிலாக, தனது ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் 80 லட்சம் மதிப்புள்ள இஎஸ்ஓபி பங்குகளை டெபாசிட்டாக எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர், “டெபாசிட்டுக்கு பதிலா பங்குகளா? ஷார்க் டேங்க் நிகழ்ச்சியை கொஞ்சம் கம்மியா பாருங்க” என்று நக்கலாகப் பதிலளித்தார். உடனே அந்த இளைஞரும் சளைக்காமல், “40 லட்சம் டெபாசிட்டா? கஞ்சா அடிக்கிறதை கொஞ்சம் கம்மி பண்ணுங்க” என்று அதே பாணியில் பதிலடி கொடுத்தார். பெங்களூருவின் வாடகை சந்தை எந்த அளவுக்கு விசித்திரமாக மாறியுள்ளது என்பதை விளக்கும் இந்த ‘காரசாரமான’ விவாதம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.