நாதாரித் தலைவரெல்லாம் முதலமைச்சரா..? திமுகவை பாஜக பக்கம் இழுத்து செல்கிறார் ஆ.ராசா… வன்னி அரசு போட்ட குண்டு… பற்றியெரியும் தமிழகம்..!

By Soundarya on ஆனி 27, 2026

Spread the love

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அண்மையில் தவெக-விற்கு ஆதரவளித்த விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். “அண்ணாவும் ராஜாஜியும் இருந்த சட்டமன்றத்தில் நாதாரித் தலைவர்களெல்லாம் இன்று முதலமைச்சராக இருந்து கொண்டு, எங்கள் தலைவரை ஒரு தேர்தலை வைத்து எடை போடுவீர்களா?” என்றும், திமுக கூட்டணி இல்லை எனச் சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆ.ராசாவின் இந்த சர்ச்சைக்குரிய விமர்சனம் குறித்து தவெக அரசின் அமைச்சரான வன்னி அரசுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, “தேர்தல் தோல்வி ஏற்பட்டதில் இருந்தே ஆ.ராசா கடுமையான மன உளைச்சலில் ஏராளமான உளறல்களைச் செய்து வருகிறார்” என்று மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

   

மேலும், திராவிடக் கொள்கைகளைத் தமிழ்நாட்டில் மிகத் திடமாகப் பேசி வரும் இயக்கங்களான விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் மீது ஆ.ராசா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார். எங்களை அவதூறு செய்வதன் மூலம், திமுக என்ற பேரியக்கத்தை ஆ.ராசா பாஜகவின் பாதையிலோ அல்லது பாஜகவின் பக்கமோ இழுத்துச் செல்கிறாரோ என்ற பலத்த ஐயம் தங்களுக்கு நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.