தாசில்தார் சம்பளத்தில் வைரம், சொகுசு கார்களா…? 30 லட்சத்தில் சிக்கி 5 கோடியில் முடிந்த… பெண் அதிகாரியின் ‘பகீர்’ லீலைகள்…!!

By Swetha on ஆனி 26, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தாசில்தாராகவும், இணை பத்திர பதிவாளராகவும் பணியாற்றி வந்த தும்மகொம்மா சுசரிதா என்பவர், சமீபத்தில் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அரசுப் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கைதைத் தொடர்ந்து சுசரிதாவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த ரெய்டில், சித்திபேட்டில் உள்ள 2.17 ஏக்கர் விவசாய நிலம், ஐதராபாத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 2 வீட்டு மனைகள், வோல்ஸ்வேகன் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா கார்கள், ரூ. 1.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ. 12 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ரூ. 38 லட்சம் வங்கி வைப்புத்தொகை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

   

பறிமுதல் செய்யப்பட்ட இந்த சொத்துக்களின் அரசு மதிப்பு சுமார் ரூ. 5.05 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தனது வருமானத்திற்கு அதிகமாக, ஊழல் பணம் மூலம் சுசரிதா ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த பறிமுதல் நடவடிக்கை அவர் மீதான சட்டப் பிடியை மேலும் இறுக்கியுள்ளது.