மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவத் துறையில் அண்மைக் காலமாக போலி மருந்துகளின் புழக்கம் பெரும் கவலைக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக, உயிர்காக்கும் மருந்துகள் முதல் சாதாரண இருமல் மருந்துகள் வரை போலியாக தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு போலி இருமல் மருந்தை உட்கொண்டதால் பல குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இருப்பினும், அவை அனைத்து மருந்துக் கடைகளிலும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்தச் சூழலில், போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு முக்கியமான புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அனைத்து வகையான தடுப்பூசிகள், புற்றுநோய் சிகிச்சை மருந்துகள், போதைப்பொருள் தன்மை கொண்ட மருந்துகள் மற்றும் மனநல சிகிச்சைக்கான மருந்துகளின் முதன்மை பேக்கிங்கில் கட்டாயமாக QR Code அச்சிடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த QR Code-ஐ பொதுமக்கள் தங்கள் செல்பேசி மூலம் ஸ்கேன் செய்து, அந்த மருந்தின் தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட முழு விவரங்களையும் எளிதாக சரிபார்க்க முடியும்.
இந்த புதிய விதிமுறை 2027 ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் போலி மருந்துகளை எளிதில் கண்டறிய முடிவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பும் மேலும் வலுப்பெறும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மருத்துவத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் இந்த முயற்சி, போலி மருந்து கும்பல்களுக்கு பெரும் தடையாக அமையும் என்றும், மக்களின் உயிரைக் காக்கும் முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிற
