BREAKING: MLA திமுகவில் சேர்ந்தார்.. விஜய்க்கு அடுத்த ஷாக்… கழன்றுகொண்ட கூட்டணி கட்சி.. பதவியை ராஜினாமா செய்ய மறுத்த சீர்காழி MLA..!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

சீர்காழி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் (MLA) செந்தில் செல்வன், தாம் வகித்து வரும் பதவியை எக்காரணம் கொண்டும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தான் ஏற்கனவே மதிமுகவில் இருந்து விலகி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதன் அடிப்படையில் தற்பொழுது திமுகவிலேயே இணைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் மதிமுக தற்பொழுது திமுக கூட்டணியில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்கத் தயாராகி வரும் சூழலில், தவெகவில் இணைவதற்கு கட்சியின் உள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த திடீர் அரசியல் திருப்பமும், சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பும் தவெக தலைவர் விஜய் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.