BREAKING: தவெக அரசு வாபஸ் பெற்றது.. எதிர்பாரா திருப்பம்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

மதுரை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவதற்கான டெண்டரைத் தமிழக அரசு அதிரடியாக வாபஸ் பெற்றுள்ளது. இத்திட்டத்திற்குத் தூய்மைப் பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தனியார்மயமாக்கல் காரணமாகத் தங்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் முறையான ஊதியம் பாதிக்கப்படும் என்று பணியாளர்கள் அச்சம் தெரிவித்தனர். இருப்பினும், தூய்மைப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைப்பதால் எதிர்காலத்தில் என்னென்ன சாதக, பாதகங்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் ஏற்படும் என்பது குறித்துத் தீர ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு தற்போது புதிய டெண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.