“SPORTS-யை எடு…DRUGS-யை விடு” மெரினாவில் கையெழுத்து போட்டு மாரத்தானை தெறிக்கவிட்ட முதலமைச்சர் விஜய்..!!

By Soundarya on ஆனி 26, 2026

Spread the love

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ’ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்’ (Start Run… Stop Drugs) என்ற பெயரில் மாபெரும் மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மாரத்தானை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தானைத் தொடங்குவதற்கு முன்பாக, “START RUN…STOP DRUGS… SPORTS-யை எடு…DRUGS-யை விடு” என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பலகையில் தனது கையெழுத்தை பதித்து, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

கையெழுத்திட்டு மாரத்தானைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அங்கிருந்த பொதுமக்களுடனும் இளைஞர்களுடனும் இணைந்து மாரத்தானில் நேரடியாகப் பங்கேற்றார். மக்களுடன் மக்களாக ஓடிய முதலமைச்சர், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை மாரத்தானில் கலந்து கொண்டு உற்சாகமாக ஓடினார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பங்கேற்பு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டத்தில் கூடுதல் எனர்ஜியையும் ஏற்படுத்தியது.