ஆசைக்காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவனை தீர்த்துக்கட்டிய இளம்பெண்… புனே கொலையின் பின்னணியில் இருக்கும் பகீர் ரகசியங்கள்…!

By Swetha on ஆனி 26, 2026

Spread the love

புனேவில் நடந்த கேதன் அகர்வால் கொலை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் கேதனின் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணான சியா கோயல் மற்றும் அவரது ரகசியக் காதலன் சேத்தன் சௌத்ரி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 20 வயதான சியா, 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர் என்றும், மதுப்பழக்கம் உள்ளிட்ட பல தவறான பழக்கவழக்கங்கள் அவருக்கு இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சியா ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் பழகி வந்ததால், அவரை நல்வழிப்படுத்த விரும்பிய அவரது பெற்றோர், நன்கு படித்து வசதியாக இருந்த கேதனுக்கு அவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து சியாவை வற்புறுத்தியுள்ளனர்.

கேதனை திருமணம் செய்வதைத் தவிர்க்கவும், அதே நேரத்தில் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினால் குடும்பத்தின் கௌரவம் கெட்டுவிடும் என்று பயந்தும், சியாவும் அவரது காதலன் சேத்தனும் சேர்ந்து கேதனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். இதன்படி, கடந்த ஜூன் 18 அன்று லோஹகாட் கோட்டையில் வைத்து இருவரும் சேர்ந்து கேதனைத் திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலைச் சதித்திட்டத்தின் முக்கிய சூத்திரதாரியே சியாதான் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது இரு குற்றவாளிகளும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

   

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சியாவின் தந்தை பிரவீன் கோயல் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், தான் ஒரு தந்தையாக இருந்தாலும் நீதியின் பாதையில் குறுக்கே நிற்க மாட்டேன் என்றும், சியாவின் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தூக்குத் தண்டனை போன்ற மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் உணர்ச்சிவசப்பட்ட அவர், கேதன் எந்தக் கோட்டையிலிருந்து கீழே தள்ளிக் கொல்லப்பட்டாரோ, அதே கோட்டையிலிருந்து சியாவையும் கீழே தள்ளிவிட வேண்டும் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால், சியாவின் தாய் பூஜா கோயல் தங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இருந்ததாகத் தெரியவில்லை என்றும், தாங்கள் திருமண வேலைகளில் பிஸியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.