தமிழ்நாட்டில் இந்த ஆண்டு எல் நினோ பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புகளை விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் என்றும் தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் பேசிய அவர், எல் நினோவின் காரணமாகப் பருவமழை குறைவாகவே இருக்கும் என்பதையும், அதன் வெப்ப அலையால் மழை குறையும் என்பதையும் விவசாயிகள் நன்றாக அறிவார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், முந்தைய அரசு நிதி நெருக்கடியை விட்டுச் சென்றிருந்தாலும், தமிழக வெற்றிக் கழக அரசு விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க்கடன் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், மக்கள் நலனுக்காகத் தவெக அரசு முழு வீச்சில் சின்சியராக உழைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இருப்பினும், மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதற்கு மாறாக உள்ளதே இந்தச் சர்ச்சை வலுக்கக் காரணமாகும். டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நடத்திய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், எல் நினோ பாதிப்பு அதிகம் இருக்க வாய்ப்புள்ள 12 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு சேர்க்கப்படவில்லை. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களே மிகக் கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே இதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
