BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின் நிர்வாகியே பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் வட்ட துணை செயலாளரான வைதேகி சமீபத்தில் அளித்த பேட்டியில், கட்சிப் பொறுப்புகளை வழங்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டியதுடன், அவர் ஒரு ஊழல்வாதியாகத் திகழ்கிறார் என்றும் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முறைகேடு குறித்து தான் தட்டிக்கேட்டபோது தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவு (CM Cell) மற்றும் தவெக தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சொந்தக் கட்சி நிர்வாகியே அதிருப்தி அடைந்து, எம்.எல்.ஏ-வுக்கு எதிராக ஊழல் புகார்களை முன்வைத்துப் போர்க்கொடி தூக்கியிருப்பது தவெக கட்சியினரிடையே தர்மசங்கடத்தையும், அப்பகுதியில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.