மேற்கு வங்கத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மம்தா பானர்ஜிக்கு மிகப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்கியுள்ளதாக, அதிருப்தி அணியின் தலைவரான ரிதப்ரதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
கட்சியை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தேவையான பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவு தங்களுக்குத்தான் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மொத்தமுள்ள 80 தற்போதைய எம்.எல்.ஏ-க்களில் (MLA) 60 பேர் தங்கள் பக்கம் உறுதியாக இருப்பதாக உரிமை கோரியுள்ளார். தேர்தல் தோல்வி தந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள், கட்சியின் பெரும்பான்மை பலத்துடன் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பிளவு மம்தா பானர்ஜியின் அரசியல் தலைமைக்கே தற்பொழுது சவாலாக மாறியுள்ளது.
