அம்மாவுக்கு கொடுத்த முதல் கிபிட்… CM விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி…? 30 ஆண்டாகத் தாய் ஷோபா பாதுகாக்கும் நெகிழ்ச்சிப் பரிசு…!

By Swetha on ஆனி 23, 2026

Spread the love

தமிழக முதல்வரும், முன்னாள் பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் தனது மகன் குறித்து பகிர்ந்த நெகிழ்ச்சியான நினைவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சிறுவயதில் மிகவும் கலகலப்பானவராக இருந்தபோதிலும், அவரது 10-வது வயதில் தங்கை வித்யா மரணமடைந்த பிறகு அவர் மிகவும் அமைதியானவராக மாறிவிட்டார் என்று ஷோபா குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய்க்கு பொதுவாகவே ஷாப்பிங் செல்வதில் ஆர்வம் குறைவு என்றும், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது குடும்பத்தினர் அனைவரும் ஷாப்பிங் சென்றாலும் அவர் ஹோட்டல் அறையிலேயே தங்கி ஓய்வெடுக்கவே விரும்புவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணலில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த விஷயம், விஜய் தனது தாயாருக்கு வாங்கித் தந்த முதல் பரிசு பற்றியதாகும். 1996 ஆம் ஆண்டு ‘வசந்த வாசல்’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, தனது நண்பர் சஞ்சீவுடன் துணிக்கடைக்குச் சென்ற விஜய், தாயாருக்குப் புடவை வாங்க முடிவு செய்துள்ளார். ஆனால், அதற்கு முன் புடவை வாங்கிய அனுபவம் இல்லாததால், மிகவும் அப்பாவித்தனமாக தனது தாயாரை தொலைபேசியில் அழைத்து, “அம்மா… புடவைக்கு என்ன சைஸ்மா?” என்று கேட்டுள்ளார். அதற்கு ஷோபா சிரித்துக்கொண்டே, “புடவைக்கு சைஸ் எதுவும் கிடையாது பா…” என்று விளக்கியுள்ளார். தான் மடிசார் கட்டுபவர் என்பதால், அதற்கென தனியாக ஏதேனும் அளவு இருக்குமோ என்ற நினைப்பில் விஜய் அப்படி கேட்டிருக்கலாம் என்றும் ஷோபா நகைச்சுவையாக நினைவுகூர்ந்துள்ளார்.

   

மகன் தனக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த அந்த முதல் புடவையை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஷோபா இன்றுவரை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்து வருகிறார். தாயின் மீதான விஜயின் பாசத்தையும், மகனின் அன்பை மதிக்கும் தாயின் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இந்த பழைய நேர்காணல் விபரங்கள், தற்போது விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களால் இணையத்தில் மிகவும் நெகிழ்ச்சியோடு பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.