தமிழக வெற்றிக் கழகத்துடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி முடிவை அறிவித்துள்ள நிலையில், விசிக இதுகுறித்து இதுவரை எந்தவொரு தெளிவான முடிவையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்கிடையே, அமைச்சரவையிலும் விசிக அங்கம் வகிப்பதால் அவர்கள் தவெகவுடன் கூட்டணி அமைத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
இருப்பினும், தவெகவுடன் தங்களுக்கு தற்போது கூட்டணி இல்லை என்பதை திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில், தாங்கள் தொடர்ந்து ஆதரவு நிலைப்பாட்டில்தான் நீடித்து வருவதாகவும் அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். நடப்பு சூழலில் நிலவி வரும் பல்வேறு அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
