CM-ஆக விஜய் சந்திக்கும் முதல் பிறந்தநாள்… நாளை சட்டசபையில் நடக்கப்போகும் ‘சம்பவம்’ என்ன…?

By Swetha on ஆனி 21, 2026

Spread the love

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி, பின்னர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி மக்கள் பணியாற்றி வருபவர் விஜய். தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 50 நாட்களைக் கடந்துள்ளார். திரையுலகில் அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கும், தமிழக அரசியலில் மாற்றத்தை விரும்பிய வாக்காளர்களின் ஆதரவும் தவெகவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

இத்தகைய சூழலில், முதலமைச்சர் விஜய் நாளை தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். அவர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால், தவெகவினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் தொற்றிக்கொண்டுள்ளது. நாளை தமிழக சட்டசபை கூடவிருக்கும் நிலையில், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் எனப் பலரும் அவைக்குள் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

   

அரசின் சார்பாக இந்தத் நன்னாளில் மக்களுக்குப் பயன் தரும் சில புதிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. மற்றொருபுறம், தவெக தொண்டர்கள் இந்த நாளை மிகவும் விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் அக்கட்சியினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.