திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு அமோனியா வாயு கசிவு காரணமாக, அங்கு பணியாற்றி வந்த ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு தங்களது பணிகளை முடித்துவிட்டு தொழிற்சாலை வளாகத்திலேயே அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்த வாயு கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறலால் கோர மரணமடைந்துள்ளனர்.
மேலும், இந்த நச்சு வாயுவை சுவாசித்த 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தனியார் மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுவதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும், பெரும் பரபரப்பும் அப்பகுதியில் நிலவி வருகிறது.
