BIG BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகல்… தவெக-வுடன் இணையும் முக்கிய கட்சி… தமிழக அரசியலில் பரபரப்பு….!

By Nanthini on ஆனி 20, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முக்கிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வந்ததோடு, தற்போதைய அமைச்சரவையிலும் இடம்பிடித்துள்ள IUML கட்சி, தற்போது திமுக கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

மேலும், தவெக கூட்டணியில் இணைவது தொடர்பாக அக்கட்சித் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், அதுகுறித்த இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த திடீர் அரசியல் நகர்வு வரும் தேர்தலில் புதிய கூட்டணியின் பலத்தை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.