டாக்டர் இல்லை… நர்ஸ் பார்த்த பிரசவம்! தாயும் சேயும் மரணம்… சாம்பலுக்குள் கிடைத்த ‘அந்த’ பொருள்… அரசு மருத்துவமனையில் அரங்கேறிய பகீர் கொடூரம்..!!

By Muthu Mani on ஆனி 19, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் சம்புகுடம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் வனஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவர் குண்டாலா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அந்தச் சமயத்தில் மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால், அங்கிருந்த செவிலியர் ஒருவரே பிரசவம் பார்த்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக பிரசவத்தின்போதே குழந்தை உயிரிழந்ததுடன், வனஜாவிற்கு அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகத்திற்கு மத்தியில், உயிரிழந்த வனஜாவின் உடலைத் தகனம் செய்துவிட்டு அவரது சாம்பலை சேகரிக்கச் சென்ற குடும்பத்தினருக்கு ஒரு அதிர்ச்சிகரமான உண்மை காத்திருந்தது. அந்தச் சாம்பலில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தி ஒன்று கிடப்பதைக் கண்டு அவர்கள் உறைந்து போயினர்.

இந்தக் கொடூரமான கண்டறிதலால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், மருத்துவமனையின் அலட்சியமே தாய் மற்றும் குழந்தையின் மரணத்திற்குக் காரணம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ அது ஒரு சாதாரண பிரசவம் தான் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலுக்குள் அறுவை சிகிச்சை கத்தி எப்படிச் சென்றது என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் கூறி தப்பிக்க முயல்கிறது. இந்தச் சூழலில், உண்மை நிலையை உணராமல் “அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுங்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லுங்கள்” என்று வெற்று முழக்கங்களை எழுப்பும் அரசியல்வாதிகள் மற்றும் சுயநல முதலாளிகளின் கருத்துக்கள், தங்களின் அலட்சியத்தால் இரு உயிர்களைப் பறி கொடுத்துவிட்டுத் தவிக்கும் ஏழைக் குடும்பத்தினரின் வேதனையை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.