டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…. சற்றுமுன் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) ஹால் டிக்கெட் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்களுடைய ‘Login ID’ மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒருவேளை ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது சிரமங்கள் ஏற்பட்டால், அதனை நிவர்த்தி செய்ய ஜூன் 22-ஆம் தேதி தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாம்களைத் தேர்வர்கள் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான இந்த TET தேர்வு வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.