“நோ இன்டர்வியூ.. வெறும் எக்ஸாம் மட்டும் தான்”… TNPSC வெளியிட்ட 461 காலிப்பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைப் பணிகளில் காலியாக உள்ள 461 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் நிரந்தரமான தமிழ்நாடு அரசு பணியாகும். இத்தேர்வின் மூலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை, வேளாண்மைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் எல்காட் (ELCOT) உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் உதவி பொறியாளர், உதவி புவியியலாளர், மருந்து ஆய்வாளர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி மேலாளர் என மொத்தம் 41 வகையான உயர்தர பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

   

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பணியின் தன்மைக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech, B.Sc, (B.Arch, L.L.B, M.B.A அல்லது M.Sc போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், 1 ஜூலை 2026 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு மற்றும் இதர தளர்வுகள் குறித்த முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாகக் காணலாம். தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய முறைகளின் அடிப்படையில் மட்டுமே நேர்காணல் ஏதுமின்றித் தேர்வு செய்யப்படுவார்கள்.

   

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், TNPSC-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ஒருமுறைப் பதிவிற்கு (OTR) ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும் (ஏற்கனவே பதிவு செய்தவர்கள் ஒருமுறைப் பதிவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை). இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 25, 2026 இரவு 11:59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தம் செய்ய ஜூன் 29, 2026 கடைசி நாளாகும். இத்தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதால், அரசுப் பணி கனவோடு இருக்கும் பட்டதாரிகள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.