திமுக அரசை விட தவெக அரசு குறைவான கடன் வாங்கிவிட்டால் தான் பதவியிலிருந்து விலகுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள சவால், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய நிர்வாக சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மாநிலத்தின் கடன் சுமை குறித்து சமீபத்தில் வெளியான வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து எழுந்த அரசியல் விவாதங்களின் பின்னணியில் இந்த அதிரடி சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தவெக அரசின் மீதான நிதி நிர்வாக விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தங்கம் தென்னரசுவின் சவாலை எதிர்கொள்ளும் வகையிலும் முதலமைச்சர் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த அரசியல் நெருக்குடிக்கு மத்தியில், மாநில அரசின் நிர்வாகப் பணிகளில் அதிகாரிகள் அனைவரும் மிகத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை எவ்வித தொய்வுமின்றி கொண்டு சேர்க்கும் வகையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதிப் பணிகளைச் சிறந்த முறையில் மேற்கொண்டு மக்கள் மத்தியில் நற்பெயரை ஈட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
