அனைவருக்கும் இலவசம்… தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய்…. காலையிலேயே குட் நியூஸ்….!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள மூன்று முக்கிய உயிரியல் பூங்காக்களுக்குப் பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாகச் செல்லலாம் என அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்துள்ளார். அதன்படி, வருகிற ஜூன் 21 மற்றும் ஜூன் 22 ஆகிய இரண்டு நாட்களுக்கு வண்டலூர் அறிஞர் அண்ணா கலைஞர் வன உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எந்தவொரு நுழைவுக் கட்டணமும் இன்றி இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து, பூங்காக்களைப் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.