“எம்.எல்.ஏக்கள் ராஜினாமா..?! வதந்திகளுக்கு வைகோ கொடுத்த அதிரடி செக்… பின்னணி என்ன…?”

By Swetha on ஆனி 17, 2026

Spread the love

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துப் பேசினார். தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க.வுக்கு கடந்த சட்டசபைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசியல் சூழலில் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். அடுத்தடுத்து நடக்கும் இந்த அரசியல் சந்திப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தன.

   

இந்தச் சூழ்நிலையில், ம.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார். “ம.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக யூகங்களை நீங்கள்தான் பேசுகிறீர்கள்; சில பத்திரிகைகளும், ஊடக விவாதங்களும் தான் இதனைத் தீவிரமாக கிளப்பி விடுகின்றன” என்று கூறி இந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.