நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவியின் பிறந்த நாளை பஞ்சாபில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் கேக் வெட்டி குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இவரை இசையில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், குறிப்பாக சமந்தா ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருந்தார். ‘ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா’ என்ற அப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இப்படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. தற்பொழுது அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டியின் பிறந்த நாளை பஞ்சாபில் கொண்டாடியுள்ளார். பஞ்சாபில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் கேக் வெட்டி தனது குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
மேலும் வாகா எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்பு படையினருடன் தேசியக்கொடி அவிழ்க்கும் நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.