வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 பணம்.. வந்தது மகிழ்ச்சி செய்தி…!!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்குவது குறித்து தவெக அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும் என முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை அரசு வட்டாரங்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை மற்றும் முறையான அறிவிப்புகள் தமிழக அரசு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் பொருளாதார ரீதியாகப் பயனடைவார்கள் என்பதால், இச்செய்தி இளைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.