“நியாயம் கிடைக்காவிட்டால் தீக்குளிப்பேன்” ரூ.50,000 பேரம் பேசுறாங்க… விஜய்யின் பிரச்சார வாகனம் ஏறி கால் முறிவு.. பாதிக்கப்பட்ட வாலிபரின் தந்தை பகீர் பேட்டி..!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அவரது பிரச்சார வாகனம் மோதி ஆட்டோ ஓட்டுநரான பிரான்சிஸ் என்ற வாலிபருக்குக் கால் முறிவு ஏற்பட்ட சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சென்னை மாதவரம் தொகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது, அவரது பாதுகாவலர்களின் கார் மோதி பிரான்சிஸ் கீழே விழுந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக விஜய்யின் பிரச்சார வாகனம் அவரது காலின் மீது ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேர்தல் சமயத்தில் இதுகுறித்துப் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாகப் பாதிக்கப்பட்ட நபரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். தற்பொழுது விஜய் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தங்களுக்கு நியாயம் வழங்காமல் சமரசம் செய்துகொண்டு புகாரைத் திரும்பப் பெறுமாறு காவல்துறையினர் அழுத்தம் கொடுப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், தனது மகனுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பிரான்சிஸின் தந்தை எச்சரித்துள்ளார்.