சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மகளிருக்கு வழங்கப்படும் மாதாந்திர உரிமைத் தொகையை தற்போதைய அளவிலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு, தகுதியுள்ள மகளிருக்கு இதுவரை இரண்டு முறை ரூ.1,000 உரிமைத் தொகை வெற்றிகரமாக வங்கித் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய உயர்வு குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எனவே, வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் அதிரடி முடிவை முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
