வெடித்தது சர்ச்சை..! கோவில் வழிபாட்டிற்கு பின் கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. அருகில் இருந்த டம்பளரில் மது..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை கோவிலுக்கு முதலமைச்சர் சி.ஜே.விஜய் சென்றிருந்தார். அங்கு இறை வழிபாடு செய்துவிட்டு திரும்பும்போது, அவரே காரை ஓட்டிச் சென்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், கார் ஓட்டும் முதலமைச்சருக்கு அருகே இருந்த ப்ளாஸ்டிக் டம்பளரில் ஐஸ் கட்டிகளுடன் ஒரு பானம் வைக்கப்பட்டுள்ளது. இதுவே தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர், அது குளிர்பானமாக இருந்தால் பாட்டிலில் இருந்திருக்கும் என்றும், டம்பளரில் இருப்பதால் அது மதுவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார் என மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ‘தனி மனித ஒழுங்கு’ பற்றி பாடம் எடுத்த முதலமைச்சர், போக்குவரத்து விதியைக் கூட மதிக்காமல் இவ்வாறு நடந்து கொள்வதா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

   

மறுபுறம், இறை வழிபாட்டிற்குச் சென்று வரும் வேளையில் யாரும் மது அருந்த மாட்டார்கள் என்று பொதுவான கருத்து நிலவுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களான விர்ச்சுவல் வாரியர்ஸ் இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்து வருகின்றனர். அந்த டம்பளரில் இருப்பது மது என்று எப்படி உங்களுக்கு உறுதியாகத் தெரியும் என்றும், அது ஒருவேளை பழச்சாறாக (ஜூஸ்) அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கியமான பானமாக இருக்கலாம் என்றும், எல்லாவற்றையும் குற்றக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது என்றும் தவெகவினர் கமெண்ட்கள் மூலம் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.