“வீட்டுக்குள்ள வந்துதான் குப்பைய வாங்கணும்”.. 20 வயது பெண்ணை கையை பிடிச்சு இழுத்த 50 வயது காமுகன்.. காரைக்குடியை உலுக்கிய கொடூரம்..!!

By Muthu Mani on ஆனி 15, 2026

Spread the love

காரைக்குடி கே.எம்.சி. காலனியைச் சேர்ந்த 20 வயது துப்புரவுப் பணியாளரான முத்துமாரி என்ற பெண், சங்கராபுரம் ரோஜா வீதி பகுதியில் மாநகராட்சிப் பணியில் ஈடுபட்டு வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த 50 வயது ராஜசேகர் என்பவர் தொடர்ந்து அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண் வீடுகளுக்குள் சென்று குப்பை எடுக்கும்போது அவரைப் பின்பக்கமாகக் கட்டிப்பிடித்து, ஆபாசமாகப் பேசி, வீட்டுக்குள் வந்துதான் குப்பையை வாங்க வேண்டும் என டார்ச்சர் செய்துள்ளார். இதுகுறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மாநகர நல அலுவலர் மற்றும் துப்புரவுத் துறையிடம் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட நபர் ஒரு “சைக்கோ” எனக் கூறி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகத் தட்டிக்கழித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று முத்துமாரி அருகில் உள்ள மற்றொரு தெருவில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராஜசேகர் திடீரென அவரது கையைப் பிடித்து இழுத்து மீண்டும் அநாகரிகமாக நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டு, தனது மேஸ்திரிக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து, மற்ற துப்புரவுப் பணியாளர்கள் அங்கு திரண்டு வந்து ராஜசேகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தங்களுக்குப் பாதுகாப்பு கோரியும், தலித் பெண்ணான தங்களைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகவும் சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்திப் பேசி வரும் ராஜசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் துப்புரவுப் பணியாளர்கள் புகார் அளித்தனர். இந்தச் சம்பவத்தால் அனைத்துப் பணியாளர்களும் வேலையைப் புறக்கணித்துக் காவல் நிலையத்தில் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.