மீண்டும் அதிர்ச்சி..! 22 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை… பயங்கர ஷாக்கில் சின்னத்திரையுலகினர்..!!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

பிரபல இந்தி தொலைக்காட்சித் தொடர்களான ‘கும்மும் பாக்யா’, ‘வாக்லே கி துனியா’ ஆகியவற்றில் நடித்துப் புகழ்பெற்ற 22 வயது இளம் நடிகை சஞ்சிதா உகலே, மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை நாலாசோபரா பகுதியில் வசித்து வந்த அவர், நேற்று மாலை தனது படுக்கையறையில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுக்கொண்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சஞ்சிதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், அச்சோல் காவல் நிலையப் போலீசார் தற்போது விபத்து மரண வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், அனைத்து கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சின்னத்திரையில் மட்டுமல்லாது விக்கி கௌஷலின் ‘சாவா’ மற்றும் மனோஜ் பாஜ்பாயின் ‘சைலன்ஸ் 2’ ஆகிய திரைப்படங்களிலும் சஞ்சிதா உகலே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.