“போர் பதற்றத்திற்கு நடுவே திடீர் அறிவிப்பு.. கமேனிக்கு பிரியாவிடை கொடுக்கும் ஈரான்.. உலகமே உற்றுநோக்கும் ‘அந்த’ 5 நாள் இறுதி அஞ்சலி”..!!

By Muthu Mani on ஆனி 13, 2026

Spread the love

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஈரானை வழிநடத்தி வந்த அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே போர் மூண்டதால், அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. போரின் காரணமாகத் தாமதமான சூழலில், கமேனிக்கான “பிரமாண்டமான” இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்வதற்காகவே ஒரு சிறப்புத் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்டப் பணிகளை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஈரான் அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வருகின்ற ஜூலை 4 ஆம் தேதி தொடங்கி ஜூலை 7 ஆம் தேதி வரை டெஹ்ரான் மற்றும் கோம் ஆகிய நகரங்களில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து, வரும் ஜூலை 9 ஆம் தேதி ஈரானின் மஷ்ஹாத் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா புனிதத்லத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.