தமிழக முதல்வர் விஜய் அரசு விழாக்களில் மதச்சார்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதனை மீறி சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துவ சபை கூட்டமைப்பின் ‘போதகர்கள் சுவிசேஷகர்கள் கூடுகை’ நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் மற்றும் அமைச்சருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசும் பங்கேற்றது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாட்டில் பேசிய வன்னி அரசு, “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக கிறிஸ்துவர்கள் வீதிக்கு வந்து போராடவில்லை” என்று சுட்டிக்காட்டியதோடு, “இன்று முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ள பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள், நாளை கிறிஸ்துவர்களையும் தங்களது இலக்காக மாற்றும்” என்று மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்தார். அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் முன்னிலையிலேயே, சிறுபான்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் வன்னி அரசு பேசியுள்ள இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது கடுமையான விவாதங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.
